22 April 2012

சூழ்நிலை அறிவியல் (Environmental Science)


வகுப்பு – 5 (Class – 5)

1. பசுமை உலகம் (Green World)

நிலம், நீர், காற்று – உயிரற்ற காரணிகள்
Land, Water, Sun, Wind – Non-Living Factors

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் – உயிருள்ள காரணிகள்
Plants, Animals, Human beings – Living Factors

மகரந்தச் சேர்க்கை (Pollination):

மகரந்தத்தாளில் உள்ள மகரந்தத்துகள்கள் சூல்முடியை அடைவாதல் கருவுருதல் (Fertilization) நடைபெறுகிறது.

சூலகம் (Ovary) கனியாக மாறுகிறது.

கருவை சுற்றியுள்ள சூலக உறையில் உணவு சேமிக்கப்படுகிறது.

சூல்கள் (Ovule) விதைகளாக மாறி சூலக உறையில் புதைந்து இருக்கும்.

மகரந்தத்தாளில் உள்ள மகரந்தத்துகள்கள் சூல்முடியைச் சென்றடைவதை மகரந்தச் சேர்க்கை என்கிறோம்.
The transfer of pollen grains from the anther to the stigma is called pollination.

ஒரு பூவின் மகரந்தத்துகள்கள் அதே பூவின் சூல்முடியை அடைவதை தன்மகரந்தச் சேர்க்கை என்கிறோம்.
The transfer of pollen grains from the anther to the stigma of the same flower is called self pollination.

ஒரு பூவின் மகரந்தத்துகள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூல்முடியை அடைவதை அயல் மகரந்தச் சேர்க்கை என்கிறோம். இது காற்றின் மூலமாகவும் நடைபெறும்.
The transfer of pollen grains from the anther of a particular flower to the stigma of another flower of the same kind is called cross-pollination. It can also take place through air.

விதை பரவுதல் (The spreading of seeds) :

விதைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நீர், காற்று, விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஆகியவற்றால் எடுத்துச் செல்லப்படுதலை விதை பரவுதல் என்கிறோம்.
The process by which seeds are carried from one place to the other by air, water, human beings, animals and birds is called the dispersal of seeds.

விதை பரவுவதனால், (Because of dispersal of seeds)

v  இனம் பரவுகிறது. (There is spreading of plants)
v  புதிய சூழலில் வளர்கிறது. (Grown in newer environments)
v  இனம் பாதுகாப்பு அடைகிறது. (The species of plants are preserved)
v  சுற்றுச்சூழல் மாசுபடுதல் தவிர்க்கப்படும்.  (Plants prevent atmospheric pollution)

விதை பரவுதல் வகைகள்:

Ø  காற்று மூலம் விதை பரவும் தாவரங்கள் (Spreading of seeds by Air)
   இலவம் பஞ்சு(Silk cotton), முருங்கை(Drumstick), எருக்கு(Calotropis)
Ø  நீரின் மூலம் விதை பரவும் தாவரங்கள் (Spreading of seeds by Water)
   தென்னை(Coconut), ஆகாயத்தாமரை(Water hyacinth), அல்லி(Lily), தாமரை(Lotus) 
Ø  வெடித்தல் மூலம் விதை பரவும் தாவரங்கள் (Spreading of seeds by explosion)
   வெண்டை(Lady’s finger), உளுந்து (Black gram), காராமணி (Black-eyed pea), பால்சம்(Balsam)
Ø  விலங்குகளின் மூலம் விதை பரவும் தாவரங்கள் (Spreading of seeds by animals)
   நாயுருவி(rough chaff), புல்(grass), நெருஞ்சி(achyranthus)

  
சில வகை தாவரங்களின் பிறப்பிடம் (Birth place of some plants):

ஆசியா(Asia) – அவரைக்காய் (Broad beans), வெங்காயம்(Onions)

ஆப்பிரிக்கா(Africa) – காப்பி(Coffee), வெண்டைக்காய்(Lady’s Finger), தர்பூசணி(Watermelon)

ஐரோப்பா(Europe) – பட்டாணி(Peas), முட்டைகோஸ்(Cabbage), நெல்லிக்காய்(Goose Berry)

தென் அமெரிக்கா(South America) – தக்காளி(Tomato), உருளைக்கிழங்கு(Potato), மக்காச்சோளம்(Maize), கொய்யா(Guava)

ஆலமரம்(Banyan Tree), புளியமரம்(Tamarind Tree), வேப்பமரம்(Neem Tree), மாமரம்(Mango Tree) தோன்றிய நாடு இந்தியா.

தாவரங்கள் தமது உணவைத் தாமே ஒளிச்சேர்க்கை மூலம் தயாரிப்பதால் அவைகள் “முதல் நிலை உணவு உற்பத்தியாளர்கள் எனப்படும்.

As Plants produce their own food through photosynthesis , we call them “primary producers”.

2. விலங்குகளின் வாழிடங்கள்
(Dwelling Places of Animals)

ü    இயற்கையான சூழலில் உயிரினங்கள் வாழும் இடம் – வாழிடம்
      The natural environment in which the organisms live is called the habitat.

ü  இந்தியாவின் தேசிய விலங்கு – புலி ;   Our National animal -  Tiger

சரணாலயம் (Sanctuary):

உயிரினங்கள் வாழ்வதற்கும், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வற்கும், பாதுகாப்பிற்கும், ஏற்ற இயற்கையான சூழல் அமைந்துள்ள இடம் சரணாலயம்.
A sanctuary is a protected environment where animals can live and reproduce.

v   கிண்டி தேசியப் பூங்கா(Guindy National Park), சென்னை – மான்கள்(Deer)

v   வேடந்தாங்கல்(Vedanthangal), காஞ்சிபுரம்பறவைகள்

v   முதுமலை(Mudumalai), நீலகிரி(The Nilgiris) – யானைகள், காட்டெருமைகள்

v   ஆனைமலை(Anaimalai), கோயம்புத்தூர் – புலி(Tiger), சிறுத்தை(Panther)

v    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, காஞ்சிபுரம் (Arignar Anna Zoological Park) வெள்ளைப் புலி (White Tiger), நரி(Jackal), குரங்கு (Monkey)

ü  சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டி சமூக காடுகள் திட்டம் மற்றும் பள்ளி, அரசு விழாக்களில் மரம் நடுவிழாவும் உண்டாக்கப்பட்டது.
To develop an environmental awareness among people, schemes like social forestry, planting of saplings during school and government celebrations, is encouraged.

ü  இந்தியாவில் மொத்தம்
     - 17 வன விலங்குப் பாதுகாப்பகங்கள் (Wild life Sanctuaries)
     - 66 தேசிய பூங்காக்கள் (National Parks)

ü  இந்தியாவின் முதல் தேசிய வன விலங்கு பூங்கா (India’s first National wild animals park) - கார்பெட் தேசிய பூங்கா(Corbett National Park), உத்ராஞ்சல்(Uttaranchal)

ü  SPCA – Society for the Prevention of Cruelty of Animals (விலங்கு வதைத் தடைச் சங்கம்)

* 1952 – இந்தியாக் காட்டு வாழ் உயிரிகள் வாரியம் (Indian Board for wild life)
* 1955 – வன விலங்கு வார விழா அறிமுகம் (Celebration of wild life week)
* 1972 – வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wild Life Protection Act)
* 1983 – தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் (National Wild Life Action Plan)
* 1986 - தேசிய பூங்கா & பாதுகாக்கப்பட்ட உயிர்க் கோளங்கள் அமைத்தல்  (Establishment of National Parks and Biosphere Reserves by the Government of India)


4. விண்வெளிப் பயணம் (Space Travel)

Space (விண்வெளி):

v    காற்று மண்டலத்திற்கு மேலே பரந்து விரிந்த பகுதி – விண்வெளி                    The wide place above the atmosphere is called space.

ü    விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பூமியை சுற்றி வரும் வகையில் மனிதனால் அனுப்பப்பட்ட ஓர் அறிவியல் சாதனம் – செயற்கைக்கோள் 
  
The body moving in an orbit around a planet is called a Satellite.

1957 ல் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற முதல் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. In 1957, Russia sent the first satellite called Sputnik.

ISRO – Indian Space Research Organization (இந்தியா விண்வெளி ஆய்வு மையம்)

ISRO was established in Bangalore in 1969.

The rocket launching pad (ராக்கெட் ஏவுதளம்) in our country is at Sri Harikotta (ஸ்ரீஹரிகோட்டா) in Andhra Pradesh.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் – ஆரியப்பட்டா (1975).       Aryabhatta from India was launched in 1975.

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் – ராக்கெட்.

விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு – நாய் (லைக்கா)

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மற்ற உயிரினங்கள் – குரங்கு, எலி, பூனை, தவளை, சிலந்தி, ஆமை.

Laika is the name of the first dog which was taken to space. Likewise, animals like monkey, rat, cat, frog, spider, tortoise have been taken to space for research purpose.

விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் – யூரிகாரின் (ரஷ்யா – 1961)

Yuri Gagarin of Russia was the first man to go to space in 1961.
Rakesh Sharma was the first Indian to go to space.

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் – இராகேஷ் சர்மா

On July 16, 1969, three American astronauts Neil Armstrong, Edwin Aldrin and Michael Collins travelled to the moon successfully.

நிலாவில் கால் பதித்தவர்கள் (16 ஜூலை 1969) நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ்

பெண் விண்வெளி ஆய்வாளர்கள் – கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்

October 22, 2008 - India launched a satellite (சந்திரயான் 1) Chandrayan 1 to study the water on the surface of moon.

The Moon takes 27.32 days for one rotation on it’s axis. It takes the same duration of time to go around the earth.
நிலா பூமியை சுற்ற ஆகும் கால அளவு & நிலா தன்னைத்தானே ஒரு முறை சுற்ற ஆகும் காலம் - 27.32 நாட்கள்.

10. பருப்பொருள்களும் பல்வகை வீடுகளும்
(Materials & Different types of Houses)

பொருட்கள் மூன்று வகைப்படும் (Three Kinds of Matter). 1. திடப் பொருள்கள் (Solid) 2. திரவப்பொருள்கள்(Liquid) 3. வாயுப்பொருள்கள்(Gas)

குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதும் குறிப்பிட்ட வடிவத்தை உடையதுமான  பொருட்கள் திடப் பொருள்கள்.                 
Matters that occupy specific space and have specific shapes are called solid.

குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதும் குறிப்பிட்ட வடிவமற்றதுமான பொருட்கள் திரவப் பொருட்கள்.
Matter which has no specific shape but occupies a specific space is called liquid matter.

குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக்  கொள்ளாததும் குறிப்பிட்ட வடிவமற்றதுமான பொருட்கள் வாயுப் பொருட்கள்.
Matters which do not occupy specific space and have no specific shapes are called gaseous matter.

எது ஒன்று தனக்கென்று ஓர் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டும் குறிப்பிட்ட நிறையைப் பெற்றும் உள்ளதோ அதுவே பொருள் எனப்படும்.
Anything that occupies space and has a specific mass is called matter.

திடப் பொருட்களும், திரவப்  பொருட்களும் அழுத்தத்தால் எந்தவித மாற்றமும் அடைவதில்லை. ஆனால், வாயுப்பொருள் அடைத்துக் கொண்டுள்ள இடம் அழுத்தத்தால் குறைகிறது.
Solid matters and liquid matters do not undergo any changes due to pressure. But the space occupied by gaseous matter gets reduced due to pressure.

வீடுகளின் வகைகள் (Kinds of houses):

1. பனி வீடுகள் (Snow Houses):
     * ஆர்க்டிக் பகுதியில் (Arctic Parts) காணப்படுகிறது
     *  -46ºC வெப்ப நிலை உள்ளதால் பனி வீடுகள் உருகுவதில்லை
     * இதில் எக்ஸிமோக்கள் வாசிக்கின்றனர் (Eskimos live here)
     * வடிவம் – ஆமை ஒட்டு வடிவம் (Look like the shell of a tortoise)
      * இதனை இக்ளுக்கள் என்று அழைப்பர் (It is called as igloos) 
                                   
2. மூங்கில் மர வீடுகள் (Bamboo houses):
   * நிலநடுக்கப் பகுதிகளில் (Earthquake prone places) – இந்தோனேஷியா, ஜப்பான்

 * விபத்தின் போது காயம் ஏற்படாத வண்ணம் மரங்கள் கனமற்றதாக இருக்கும் (Even if the housing gets affected during earthquake and volcanoes people are not injured due to the light weight of these houses )

3. அடுக்குமாடி வீடுகள் (Apartment type of houses):
        * அடிதளம் மிகவும் உறுதியானதாக இருக்கும் (Foundation very strong)
        * பெருநகரங்களில் மிகுதியாகக் காணப்படும்

4. கூடார வீடுகள் (Tents):
        * தற்காலிக வீடுகள் (Temporary house)
        * இவை “நகரும் வீடுகள் எனப்படும் (They are also called mobile houses)

5. மரத்தின் மேல் வீடுகள் (House built on a tree):
        * இவை “பாதுகாப்பு வீடுகள் (Safe houses) அல்லது அந்தர வீடுகள் (upper houses) எனப்படும்.
        * கடல் தீவுகளில் பரவலாக காணப்படும் (Such houses are also found in coastal Islands) 

6. விண்ணைத்தொடும் கட்டடங்கள் (Sky scrapers):
        * மிகப் பெரிய நகரங்களில் காணப்படும் (found in large cities)
        * துபாயில் புர்ஜ் காலிபா என்னும் கட்டிடமே உலகின் மிக உயர்ந்த கட்டிடம். உயரம் -  828 மீட்டர். இதில் 160 தளங்கள் உள்ளன. (The tallest building in the world is in Dubai and it is known as Burj khalifa. The height of this building is 828 m. It has got 160 floors.)

11. Save Energy (ஆற்றல் சேமிப்பு)

எந்த வேலையைச் செய்வதற்கும் ஆற்றல் தேவை. நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்கு ஆற்றல் கிடைக்கிறது.

மின் ஆற்றல்:

நீர் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், காற்றாலை மின் நிலையங்கள் மூலமாக மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.  

சூரிய ஒளி மூலமாகவும் குப்பை மற்றும் கழிவுப் பொருள்களில் இருந்தும் மின் ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.

20 யூனிட் மின்சாரம் வழங்க மின் நிலையங்கள் 100 யூனிட் தயாரிக்க வேண்டும். 80 யூனிட் கம்பிகள் வழியாக வரும் போது இழக்கப்படுகிறது.

ஆற்றல் மூலங்கள்:

1. புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலங்கள் (Non-Renewable Energy Sources):
Due to high pressure and temperature, the animals and plants under the earth decomposed to become coal and petroleum.
பல கோடி ஆண்டுக்கு முன்னர் பூமிக்கு அடியில் புதையுண்ட விலங்கினங்களும், தாவரங்களும் மக்கி அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்திற்கு உட்பட்டுப் பெட்ரோலியப் பொருட்களாகவும், நிலக்கரியாகவும் மாற்றமடைகின்றன.  

2. புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்கள் (Renewable Energy Sources):
The sources that can be produced naturally and not be exhausted are called renewable resources.
இயற்கையாகவே தொடர்ந்து உற்பத்திச் செய்யக்கூடியதும் எந்த நிலையிலும் தீரிந்து விடாததுமான ஆற்றல் மூலங்களைப் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்கள் என்கிறோம்.

Renewable resources (புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்கள்) – Sun (சூரியன்), Air(காற்று), Water(நீர்), Cow dung (மாட்டுச்சாணம்)

India stands first in annual solar power generation. Second in bio-gas, third in hydro-electric power generation and fourth in wind power generation at the world level.

உலக அளவில் இந்தியா:

சூரிய ஆற்றல் உற்பத்தி -  முதலிடம்,
சாண எரிவாயு உற்பத்தி - இரண்டாம் இடம்
நீர் மின் உற்பத்தி – மூன்றாம் இடம்  
காற்றாலை மின் உற்பத்தி – நான்காம் இடம்  

CFL lamps – Compact Fluorescent lamps.

The National Energy Conservation day (தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்) is December 14.

12. அறிவியல் அறிஞர்கள் (Scientists)

விக்ரம் வி.சாராபாய் (Vikram. A. Sarabhai) :

* விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திட்டவர்(To create a new era of research in Astrophysics)

* 1919 குஜராத் மாநிலத்தில் பிறந்தார் (Born on 1919 in Gujarat)

* திருவனந்தபுரத்தில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தை நிறுவினார் (Installed the Thumba Rocket Launching Station near Thiruvananthapuram)

* பணி நிறுவனம்: இந்திய விண்வெளி ஆய்வுமையம்(Indian Space Research Centre)

* ஆய்வு வழிகாட்டி (Guide): சர்.சி.வி.ராமன்(Sir. C. V. Raman)

* விருதுகள் (Awards): பத்ம பூஷன்(Padmabooshan) & பத்ம விபூஷன்(Padmavibooshan)

* ஆரியபட்டா என்ற செயற்கைக்கோள்ளை வடிவமைத்தார். (Designed the Aryabhatta Satellite)

* சாராபாய் இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் & இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற்படுத்தினார். (Founded Sarabhai Physics Research Station & Indian Space Research Institute)

* காஸ்மிக் கதிர்கள் விண்ணில் இருந்து பூமியை வந்தடைகின்றன  என்பதைக் கண்டறிந்தார். (Discovered cosmic rays rise from space and reach the earth)

 * தி சாட்டிலைட் இண்டஸ்ட்ரியல் டெலிவிஷன் சோதனை வெற்றி கண்டது. 2400 சிற்றூர்களில் உள்ள 5 மில்லியன் மக்கள் பயன் அடைந்தனர். (The satellite industrial television was successful. 5 million people in 2400 villages were able to enjoy a variety of television channels)


சர்.ஜெகதிஸ் சந்திரபோஸ் (Sir. Jagadish Chandra Bose):

இடம் & பிறப்பு : டாக்கா மாவட்டம் (Dhaka) & 30 நவம்பர் 1858

* ரேடியோ அலைகள் பற்றிய ஆராய்ச்சி (Radio Waves Research) – கம்பி இல்லாமலேயே மின்சாரத்தை அலைகளாக அனுப்ப முடியும் என்பதை மெய்ப்பித்தார் (He proved that electricity can be sent to space as electro waves without wire)

* மார்க்கோனி வானொலியைக் கண்டுபிடிக்க மின்காந்த அலைகள் பற்றிய கருத்துத்தான் அடிப்படையாக இருந்து. (Marconi invented the Radio with the guidance of the electromagnetic waves)

* ரேடியோ அலைகளைக் கண்டுபிடிக்க கோஹார் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். (He invented KOHAR to detect radio waves) 

* கிரஸ்கோக்கிராப் – தாவரங்களின் நுட்பமான உணர்வை வெளிக்காட்டும். (He invented  Crescograph which can trace the micro-sensations of plants)

* 1917 ல் “சர் பட்டம் பெற்றார். (He earned the title of ‘Sir’ in 1917)

* 23 நவம்பர் 1937 ல் மரணம் அடைந்தார். (He died on November 23, 1937)

* கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் செடிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. (The Bose Institute at Kolkatta still continues his work on plant research)  

லூயிபாஸ்டியர் (Louis Pasteur):

- நுண்ணுயிரியல் மற்றும் வேதியியல் விஞ்ஞானி. (Scientist of chemistry & microbiology)

- “நுண்ணுயிரியலின் தந்தை (Father of Microbiology)

- Place of Birth : France

- Work station :  University of Strasburg (ட்ராஸ்பார்க் பல்கலைக்கழகம்)

கண்டுபிடிப்புகள்:

- வெறிநாய்க்கடிக்கு மருந்து (The Anti-Rabies Vaccine)

- பால் திரிந்து போவதைத் தடுக்கும் பாஸ்டுரைசேஷன் முறை (Discovered the Pasteurization method of preserving milk)

-பால் திரிதல், பழச்சாறு புளித்துப் பொங்குவதற்குக் காரணம் நுண்ணுயிரிகள் (Cruding of milk and fermentation are caused by micro-organisms)

- பால் கெட்டுப்போகாமல் இருக்க காய்ச்சிப் பயன்படுத்தும் முறை (Different methods of food preservation)

- நுண்ணுயிரிகள் வாழ ஆக்ஸிஜன் தேவையில்லை. (Some micro-organisms can live without oxygen (anaerobes))

13. தாவரவியல் பூங்கா (Botonical Garden)

Ø தீக்குச்சி (தாவரத்தின் தண்டுப்பகுதி) தயாரிக்கப் பைன் மரம் பயன்படுகிறது. (Pine trees are used to make matchstricks )

Ø வில்லோ மரம் கிரிக்கெட் மட்டை செய்யப் பயன்படும். (Cricket bats are made from willow trees)

Ø  வீடு கட்ட பயன்படும் மரங்கள் (To build houses) – தேக்கு (Teak), பூவரசு(Poovarasu), மூங்கில்(Bamboo)

Ø வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்(To make furniture)மா(mango), மஞ்சணத்தி(Manjanathi), படாக்(Padak)

Ø கலைப் பொருட்கள் (For artistic work) - தேக்கு (Teak), பிரம்பு (Bamboo), ரோஸ்வுட் (Rose wood)

மருத்துவக் குணமிக்கத் தாவரங்கள்: (Plants used as medicines)

இஞ்சி(Ginger) – பித்தத்திற்கு(For bile)

புதினா(Mint) – அஜீரணத்திற்கு(For digestion)  

யூகலிப்டஸ்(Eucalyptus) – தலைவலிக்கு(For headache)

மணத்தக்காளி(Manathakkali) – வாய்ப்புண்ணுக்கு(For mouth ulcer)

வல்லாரை(Vallarai) – நினைவாற்றலை அதிகரிக்க(To increase memory power)

துளசி(Tulsi) – சளிக்கு(For cold and cough)  

சோற்றுக் கற்றாழை(Aloevera), குப்பை மேனி(Acalypa indica)                  - தோல் நோய்க்கு(For skin disease)

கீழாநெல்லி(Keezhaneli)மஞ்சள் காமாலைக்கு(Jaundice)

நன்னாரி(Indian Sarsaparilla) – உடல் குளிர்ச்சிக்கு(For cooling the body)

தூதுவளை(Dhoodhuvalai) – மார்புச்சளிக்கு(Chest cold)

ஆமணக்கு(Jatropha) – மலச்சிக்கலை நீக்க(For constipation)

பூக்கள்(Flowers):

சங்குப்பூவிலிருந்து(Clitoria)  நீல நிறச்சாயம் மற்றும் மொரிண்டா(Morinda) தாவரப்பட்டையிலிருந்து மஞ்சள் நிறச்சாயம் எடுக்கப்படும்.  

These dyes are used to colour clothes, to manufacture inks, paints and varnish.

நோய் தீர்க்கும் மூலிகைப் பூக்கள்(Flowers used for medical purposes):

நித்திய கல்யாணி(Nithya Kalyani) -  ரத்தப் புற்று நோய்(For blood cancer)

செம்பருத்தி(Hibiscus) – இதயக் கோளாறு(Heart problem), ரத்த சுத்தி(Blood purification)

வேப்பம் பூ(Neem flower) – குடல் பூச்சிகளை அழிக்க(to worms infestation of the intestine)

ஊமத்தம் பூ(Datura flower) – ஆஸ்துமா(to cure wheezing)

கிராம்பூ(Clove flower) – பல்வலி(to cure tooth ache)

ரோஜாப்பூ(Rose) – உடல் குளிர்ச்சி(for cool down the body system)

தும்பைப்பூ(Thumbai) – சளி(to cure cold and cough)

முருங்கைப்பூ(Drumstick flower) – இரும்புச் சத்து, ரத்தப் பெருக்கம்(rich source of iron and to increase the blood count)

வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் பூக்கள் (Flowers used to make perfumes) – Lotus(தாமரை), Dhalia(டாலியா), Jasmine(மல்லிகை), parijatham(பாரிஜாதம்), Mari Gold (மருக்கொழுந்து), Rose(ரோஜா), Shenbagam(செண்பகம்), Chrysanthemum(சாமந்தி)